என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரதமர் இம்ரான் கான்
நீங்கள் தேடியது "பிரதமர் இம்ரான் கான்"
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாகிஸ்தானுக்கு விழும் ஓட்டாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புண்டு என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியின் கூட்டணி அமைத்துள்ளது. மோடிக்கு போடும் ஒட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கும் ஓட்டு ஆகும்.
மோடி அவர்களே உங்களுக்கு முதலில் நவாஸ்செரீப் நண்பராக இருந்தார். தற்போது இம்ரான் கான் உங்களுக்கு சிறந்த நண்பராகி விட்டார். உண்மை இப்போது வெளிவந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
கராச்சி:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம். பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும்.
இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்று நான் பார்க்க நினைத்தேன், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த இந்திய முஸ்லிம்களை அவர் அறிந்திருந்தார், தீவிர ஹிந்து தேசியவாதத்தால் இப்போது கவலைப்படுகிறார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவு அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, ஒரு முக்கிய கவலையாக இருந்தது என்று கூறினார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். #ImranKhanorders #forcedconversion #forcedmarriage #teenageHindugirls
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.
பின்னர், ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். #ImranKhanorders #forcedconversion #forcedmarriage #teenageHindugirls
சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். #ImranKhaninChina
பெய்ஜிங்:
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.
இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhaninChina
ராவல் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Imrankhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர்.
இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாளிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் இப்பகுதியில் பிரதமர் இம்ரான்கானின் 5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர மாளிகையும் உள்ளது. அது சரிவர திட்டமிடாமலும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சாகிப் நிஷார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டிய குற்றத்துக்காக இம்ரான்கான் உரிய அபராத தொகையை செலுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்ற வீடுகள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் நிஷார் உத்தரவிட்டார். அதற்கு பதில் அளித்த இம்ரான் கான் வக்கீல் பாபர் அவான் தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஒத்துழைப்பார் என உறுதி அளித்தார். #Imrankhan
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர்.
இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாளிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் இப்பகுதியில் பிரதமர் இம்ரான்கானின் 5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர மாளிகையும் உள்ளது. அது சரிவர திட்டமிடாமலும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சாகிப் நிஷார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டிய குற்றத்துக்காக இம்ரான்கான் உரிய அபராத தொகையை செலுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்ற வீடுகள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் நிஷார் உத்தரவிட்டார். அதற்கு பதில் அளித்த இம்ரான் கான் வக்கீல் பாபர் அவான் தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஒத்துழைப்பார் என உறுதி அளித்தார். #Imrankhan
அமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருத வேண்டாம் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். #IndPakTalks #ImranKhan
இஸ்லாமாபாத்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.
இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
மேற்கண்ட இரு சம்பவங்களையடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் நடவடிக்கை குறித்து நேற்று கருத்து தெரிவித்த இம்ரான் கான், ‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய தலைமை தனது அடாவடி போக்கை கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வறுமையை ஒழிக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார். #IndPakTalks #ImranKhan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X